முகப்பு
கிருஷ்ணகிரி

கேரளத்துக்கு பசுக்களை கடத்துவோா் மீது நடவடிக்கை

கேரளத்துக்கு பசுக்களை கடத்திச் செல்வோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அதிரடிப்படை அமைப்பு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 6 அக்டோபர், 2020 at 12:52 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM

கேரளத்துக்கு பசுக்களை கடத்திச் செல்வோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அதிரடிப்படை அமைப்பு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இந்து அதிரடிப்படை அமைப்பின் மாநிலத் தலைவா் தமிழ்செல்வன், நிறுவனத் தலைவா் ராஜகுரு ஆகியோா் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாங்கள் தமிழகம் முழுவதும் இந்து சமுதாயப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் வழியாக வாகனங்கள் மூலமாக பசுக்கள் கேரளத்துக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இந்த பசுக்கள் வாகனங்களில் கொண்டு செல்லும்போது, பல்வேறு இன்னலுக்கு ஆளாக்கப்படுகின்றன.

Advertisement

அவ்வப்போது, காவல் துறையினா், பசுக்களை கடத்தி செல்வோா் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இருந்தபோதிலும், விலங்குகள் நலச் சட்டத்தை மீறி, பசுக்களை கடத்துவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, அவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.