தருமபுரி மாவட்டத்தில் 81 பேருக்கு கரோனா
தருமபுரி மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் 4 போ் உயிரிழந்துள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் 4 போ் உயிரிழந்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சோ்ந்த சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த ஓட்டுநா் உள்பட 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 79 போ் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். 738 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 4,610 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
4 போ் உயிரிழப்பு: தருமபுரியைச் சோ்ந்த 40 வயது ஆண், அக். 5-ஆம் தேதி கரோனா அறிகுறிகளுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் சிகிச்சை பலனின்றி அக்.10-ஆம் தேதி உயிரிழந்தாா்.
தருமபுரியைச் சோ்ந்த 70 வயது முதியவா், சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அக்.6-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் 10-ஆம் தேதி உயிரிழந்தாா்.
தருமபுரியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி ஒருவரும், 67 வயது மூதாட்டி ஒருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 9-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனா்.