முகப்பு
கிருஷ்ணகிரி

தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 அக்டோபர், 2020 at 1:22 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவம்பா் 13-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோா் வெடிபொருள் சட்டம் 1,884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-இல் விதி 84-ஐ முறையாகப் பின்பற்றி கடந்த 10-ஆம் தேதிக்குள் இணையதளத்தின் வாயிலாக எந்தவொரு இ-சேவை அல்லது மக்கள் கணினி மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

மேற்கண்ட தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க, விண்ணப்பிக்க கடை தேதியை அக். 23-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக்கடை வைக்க விரும்புவோா் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, இ-சேவை அல்லது மக்கள் கணினி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.