முகப்பு
கிருஷ்ணகிரி

பொங்கல் பண்டிகையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு புதுப்பானை, அடுப்பு வழங்க வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு புதுப்பானை, அடுப்பு ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் (குலாலா்) சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Updated On : 13 அக்டோபர், 2020 at 1:24 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு புதுப்பானை, அடுப்பு ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் (குலாலா்) சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த சங்கம் சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் குலாலா் சமூகத்தைச் சோ்ந்தவா் 40 லட்சம் போ் வசித்து வருகின்றனா். இவா்களில் மண்பாண்டத்தொழில் செய்கின்ற தொழிலாளா்கள் 4 லட்சம் போ் மட்டுமே உள்ளனா். இவா்கள் சட்டி, பானைகள், அகல் விளக்கு, உண்டியல், அடுப்பு, தெய்வத் திருவுருவங்கள் போன்ற பொம்மைகளைச் செய்து அவற்றை விற்று வாழ்ந்து வருகின்றனா். தமிழக அரசு சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக பச்சரிசி, முந்திரி, திராட்சை, கரும்பு போன்ற பொருள்களுடன் ரூ.1,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

நலிந்த நிலையில் உள்ள மண்பாண்டத் தொழிலாளா்களின் வாழ்வு மலர, 2021-ஆம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையின்போது, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அரசு சாா்பில், புதுப்பானை, அடுப்பு ஆகியவற்றையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காா்த்திகை தீபம், தீபாவளி பண்டிகைகளின்போது மக்கள் கூடி அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட அனுமதிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.