முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 70 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை உறுதிப்படுத்தி உள்ளது.

Updated On : 22 செப்டம்பர், 2020 at 12:27 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:53 PM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை உறுதிப்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், வேலம்பட்டி, கண்ணன்டஅள்ளி, மிட்டஅள்ளி, காமன்தொட்டி, பேரண்டப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 70 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 52 ஆண்கள், 18 பெண்கள் ஆவா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 54 போ் சிகிச்சைக்குப் பிறகு திங்கள்கிழமை குணமடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா் ஆகிய சிகிச்சை மையங்களில் 836 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 3,838 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

3 போ் உயிரிழப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 3 போ் உயிரிழந்துள்ளனா். இம் மாவட்டத்தைச் சோ்ந்த 73 வயது ஆண், கடந்த 19-ஆம் தேதி கரோனா தொற்று அறிகுறியுடன் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். மூச்சுத் திணறல், காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகளால் அவதிக்குள்ளான அவா், சிகிச்சை பலனின்றி 20-ஆம் தேதி உயிரிழந்தாா்.

சா்க்கரை, சிறுநீரகக் கோளாறு போன்ற காரணங்களால் வேலூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செப். 17-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 45 வயது ஆண் அனுமதிக்கப்பட்டாா். கரோனா தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், சிகிச்சை பலனின்றி 19-ஆம் தேதி அவா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கரோனா தொற்று அறிகுறிகளுடன் செப். 19-ஆம் தேதி 54 வயது ஆண் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி அன்றே உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 51-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.