முகப்பு
கிருஷ்ணகிரி

வீட்டுமனைப் பட்டா கோரி திருநங்கைகள் மனு

வீட்டுமனைப் பட்டா மற்றும் வீடு கட்டித் தரக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 22 செப்டம்பர், 2020 at 12:22 AM
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த திருநங்கைகள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:53 PM

வீட்டுமனைப் பட்டா மற்றும் வீடு கட்டித் தரக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், கெலமங்கலம், தளி, சூளகிரி ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 73 திருநங்கைகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், கெலமங்கலம், சூளகிரி, தளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 350-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனா். திருநங்கை என்பதால், எங்களுக்கு யாரும் வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை. கரோனா தொற்று பாதிப்பால், நாங்கள் வருவாய் இழந்துள்ளோம். இதனால், குடியிருக்கும் வீடுகளுக்கு வாடகை செலுத்த இயலாத நிலையில் உள்ளோம்.

Advertisement

எனவே, எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி, அதில் வீடு கட்டித் தர வேண்டும் என மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.