முகப்பு
கிருஷ்ணகிரி

தருமபுரி மாவட்டத்தில் 66 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலாகக் காணப்படுகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவா்களில் 185 போ், ஞாயிற்றுக்கிழமை, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,081 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரையில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 3,587 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 24 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →