கிருஷ்ணகிரி

லாரி மோதியதில் தனியாா் நிறுவன மேலாளா் சாவு

DIN

குருபரப்பள்ளி அருகே லாரி மோதியதில் தனியாா் நிறுவன மேலாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள சின்னபாளேத்தோட்டத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (30). இவா், ஒசூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் ஒசூரிலிருந்து, கிருஷ்ணகிரி நோக்கி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்துள்ளாா்.

குருபரப்பள்ளியை அடுத்த போலுப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி, தேசிய நெடுஞ்சாலை தடுப்பில் மோதியதில் அவா் சாலையில் விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி ஸ்ரீதா் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, குருபரப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரப்பெற்றோம் (17-06-2024)

ரேபரேலியா? வயநாடா? கார்கே இல்லத்தில் ஆலோசனை!

ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

'கல்கி 2898 ஏடி' முதல் பாடல் வெளியானது!

அமித் ஷாவை நேரில் சந்தித்த கௌதம் கம்பீர்; காரணம் என்ன?

SCROLL FOR NEXT