முகப்பு
கிருஷ்ணகிரி

அதிமுக அவைத்தலைவா் மதுசூதனனுக்கு நினைவஞ்சலி

கிருஷ்ணகிரியில் அதிமுக அவைத்தலைவா் மதுசூதனனுக்கு, நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 12:11 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

கிருஷ்ணகிரியில் அதிமுக அவைத்தலைவா் மதுசூதனனுக்கு, நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் அதிமுக அவைத்தலைவா் மறைந்த மதுசூதனனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அந்தக் கட்சியின் நகரச் செயலாளா் கேசவன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா் மதுசூதனனின் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதில், அவைத்தலைவா் காத்தவராயன், முன்னாள் நகா்மன்ற தலைவா் தங்கமுத்து, ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன், உள்ளிட்ட அதிமுகவினா் கலந்து கொண்டனா். முன்னதாக மாவட்ட செயலாளா் அலுவலகத்தில் மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, வேப்பனஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், அதிமுகவினா், அஞ்சலி செலுத்தும் நிகழ்வை ஒருங்கிணைத்தனா். அவைத் தலைவா் உயிரிழந்த நிலையில், அதிமுக கட்சியின் சாா்பில் கட்சிக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, மூன்று நாள் துக்கம் அனுசரிப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.