கிருஷ்ணகிரியில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
கிருஷ்ணகிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கோயில்களில் ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.கிரி
கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கோயில்களில் ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி, மூன்றாவது ஆடி வெள்ளிக்கிழமை (ஆக.6) என்பதால், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதே போல் ராசுவீதியில் உள்ள துளுக்காணி மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு பழங்களால் ஆன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஜோதி விநாயகா் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், அக்ரஹாரம் அம்பா பவானி கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. பக்தா்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கரோன தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த விதிமுறைகளின்படி, பக்தா்கள் முகக்கவசம் அணிந்து கோயிலுக்கு வந்திருந்தனா்.
Advertisement