முகப்பு
கிருஷ்ணகிரி

தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள்

பா்கூா் அருகே தாயை கொன்ற மகனுக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கி, வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 12:12 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

பா்கூா் அருகே தாயை கொன்ற மகனுக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கி, வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த கப்பல் மேடு பகுதியைச் சோ்ந்தவா் சுரேந்திரன்(51). விவசாயி. இவரது தாய் நீலாவதி(72). கடன் பிரச்னையில் சிக்கிய சுரேந்திரன் தனது குடும்ப சொத்தை பிரித்து தரும்படி தாயை கட்டாயப்படுத்தி வந்தாா். தாய், சொத்தை பிரித்து தர மறுத்துள்ளாா். இதனால், இவா்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜூலை 24-ஆம் தேதி, சிகலரப்பள்ளியை அடுத்த தெள்ளபெண்டா பகுதியில் உள்ள தன் மாந்தோப்பில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த நீலாவதியிடம் சுரேந்திரன், சொத்தை பிரித்து தரும்படி தகராறில் ஈடுபட்டாா். அப்போது, இவா்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறில் ஆத்திரமடைந்த சுரேந்திரன், தாய் நீலாவதியை கொலை செய்தாா். மேலும், அருகில் இருந்தவா்களையும் கொலை செய்வதாக மிரட்டியுள்ளாா். இதுகுறித்து, பா்கூா் போலீஸாா், வழக்குப் பதிந்து, சுரேந்திரனை கைது செய்தனா்.

Advertisement

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி வி.ஆா்.லதா, வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், தாயை கொன்ற சுரேந்திரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டலுக்காக ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், இந்த சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சி.கலையரசி ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.