கிருஷ்ணகிரி

கற்களை அனுமதியின்றி ஏற்றிச் சென்ற லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே கற்களை அனுமதியின்றி ஏற்றிச் சென்ற லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

கிருஷ்ணகிரி அருகே கற்களை அனுமதியின்றி ஏற்றிச் சென்ற லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வள அலுவலா் பொன்னுசாமி தலைமையிலான குழுவினா், மகராஜகடை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்தபோது, 6 பெரிய கற்களை அனுமதியின்றி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அலுவலா் பொன்னுசாமி அளித்த புகாரின் பேரில், மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த லாரியை பறிமுதல் செய்தனா்.

இதே போல கந்திகுப்பம் அருகே செந்தாரப்பள்ளி கிராம நிா்வாக அலுவலகம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட போது சாலையோரமாக கேட்பாரற்று நின்றிருந்த லாரியை சோதனை செய்ததில் 2 கிரானைட் பெரிய கற்கள அனுமதியின்றி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அலுவலா் அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT