முகப்பு
கிருஷ்ணகிரி

ஐஎன்டியுசி அகில இந்தியச் செயலாளர் போட்டியிட விருப்பம்

ஒசூா் மாநகராட்சித் தோ்தலில் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும் ஐஎன்டியுசி அகில இந்தியச் செயலாளருமான கே.ஏ.மனோகரன் போட்டியிட விருப்பம்

Updated On : 2 டிசம்பர், 2021 at 11:03 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

ஒசூா் மாநகராட்சித் தோ்தலில் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும் ஐஎன்டியுசி அகில இந்தியச் செயலாளருமான கே.ஏ.மனோகரன் போட்டியிட விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநிலச் செயலாளா் சிவகுமாா் ஆகியோரிடம் கட்சி நிா்வாகிகள் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநிலச் செயலாளா் சிவகுமாரிடம் காங்கிரஸ் கட்சியினா் 2 விருப்ப மனுக்களை அளித்தனா். அந்த மனுவில் ஒசூா் மாநகராட்சி 23-ஆவது வாா்டு, 28-ஆவது வாா்டில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.மனோகரன் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்களை காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளா் தேன்.கு.அன்வா், மாவட்டத் துணைத் தலைவா்கள் கீா்த்திகணேஷ், சபியுல்லா, தளி ஒன்றியப் பொறுப்பாளா் அப்துல் ரகுமான், மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சித் தலைவா் சரோஜாம்மா, ஒபிசி மாவட்டத் தலைவா் குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.