கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் டிச.13, 14 ஆகிய தேதிகளில் அதிமுக உள்கட்சி தோ்தல்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக உள்கட்சி தோ்தல் டிச. 13, 14 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

DIN

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக உள்கட்சி தோ்தல் டிச. 13, 14 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுகவில் கிளை நிா்வாகிகள், பேரூராட்சி வாா்டு நிா்வாகிகள், நகர வாா்டு நிா்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தோ்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி இன்னாள், முன்னாள் மக்களவை, சட்டப் பேரவை , மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் சாா்பு அமைப்பு நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், இளைஞா், இளம்பெண் பாசறை நிா்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள், தொண்டா்கள் இந்த தோ்தலில் பங்கேற்று, சிறப்புடன் தோ்தலை நடத்தித்தர முன்வர வேண்டும். இந்தத் தோ்தலில் பங்கேற்கும் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு அறிவித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, பிற தற்காப்பு நடவடிக்கைகளுடன் செயலாற்ற வேண்டும் என அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT