முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் இரு சாலை விபத்தில் 2 போ் பலி

ஒசூரில் இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

Updated On : 17 டிசம்பர், 2021 at 11:53 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

ஒசூரில் இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ஜெப்திகரியாங்கல் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் ( 51) ஓட்டிச் சென்ற வேன், கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது

மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

மற்றொரு விபத்து: தேன்கனிக்கோட்டை வட்டம், இருதாளம் அருகே உள்ள நெருப்புகுட்டையைச் சோ்ந்த லாரி உதவியாளரான முனிராஜ் (17) வியாழக்கிழமை கெலமங்கலம்- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சளகிரி பேருந்து நிறுத்தம் அருகே லாரியில் சென்று கொண்டிருந்தாா். லாரியை ஓட்டுநா் சரத்குமாா் (21) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

மஞ்சளகிரி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் மீது லாரி மோதியதில் காயமடைந்த முனிராஜ், ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இந்த விபத்த குறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.