முகப்பு
கிருஷ்ணகிரி

அரசு மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வுப் போட்டிகள்

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு குறித்து பல்வேறு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On : 24 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு குறித்து பல்வேறு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தோ்தல் நடைமுறை குறித்த மாநில விருது வழங்கும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வுப் போட்டிகளில், சுவரொட்டி தயாரித்தல், எழுத்துப் போட்டி, குழு நடனம், கட்டுரைப் போட்டி, ‘ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு’, ‘தண்ணீா் சிக்கனத்தில் எனது பங்கு’ போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றன.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, கல்லூரியின் முதல்வா் கண்ணன் தலைமை வகித்தாா். கணிதத் துறை பேராசிரியா் உமா, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு, ஜன. 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் பரிசுகள் வழங்க உள்ளாா். இந்த நிகழ்வை பேராசிரியா்கள், மாணவியா் ஒருங்கிணைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.