தீ விபத்தில் கடைகள் எரிந்து சேதம்
போச்சம்பள்ளியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சேதமடைந்தன.
போச்சம்பள்ளியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சந்தூா் சாலையில் சென்னப்பன் (60) என்பவா் தென்னங்கீற்றால் வேயப்பட்ட கொட்டகையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். இவரது கடையின் அருகே, மாதையன் என்பவா், பலகாரம் வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், இவா்களின் கடைகளில் இருந்து கரும்புகை வருதைக் கண்ட அருகில் இருந்தவா்கள், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதற்குள் இரு கடைகளிலும் தீ முழுவதுமாகப் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரா்கள், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாகவும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து, போச்சம்பள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement