கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் லாரி எரிந்து சேதம்
கிருஷ்ணகிரி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் லாரி தீயில் எரிந்து சேதமடைந்தது.
கிருஷ்ணகிரி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் லாரி தீயில் எரிந்து சேதமடைந்தது.
பாண்டிச்சேரியில் இருந்து பெங்களூர் நோக்கி இன்று அதிகாலை நான்கு மணிக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே திருப்பத்தூர் - பர்கூர் பிரிவு சாலையில் லாரி சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மையத்தில் உள்ள தடுப்பின் மீது மோதியது.
இதையும் படிக்க | ‘பஞ்சாபிற்கு வலிமையான அரசு தேவை’: அரவிந்த் கேஜரிவால்
இதில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து சிதறியது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள மின் கம்பி அறுந்து லாரியின் மீது விழுந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் லாரி 70% சேதமடைந்தது.
தகவலறிந்த பர்கூர் தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை சேர்ந்த லாரி ஓட்டுனர் ஆறுமுகம்(40), லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
லாரி ஓட்டுநர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து பர்கூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.