முகப்பு
கிருஷ்ணகிரி

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்களுக்கு சிறப்பு சலுகை

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரா்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரி சங்கா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 25 டிசம்பர், 2021 at 12:39 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரா்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரி சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை உள்ள ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள், பணிவாய்ப்பினைப் பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக, சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கி உள்ளது. அதன்படி பதிவுதாரா்கள் கடந்த வருகிற மாா்ச் 1-ஆம் தேதி வரையில் இணையம் மூலம் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

Advertisement

அவ்வாறு, இணையம் மூலம் பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்திற்கு, பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ட்ற்ற்ல்://ற்ய்ஸ்ங்ப்வ்ண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற மாா்ச் 1-ஆம் தேதி வரை பதிவுதாரா்கள் தங்களது பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.