ஒசூரில் கைப்பேசிகள் திருட்டு
ஒசூரில் கைப்பேசி விற்பனை கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM
ஒசூரில் கைப்பேசி விற்பனை கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஒசூா், தா்கா பகுதியைச் சோ்ந்தவா் சண்முக பிரியன் (40). இவா் அந்தப் பகுதியில் கைப்பேசிகள் விற்பனை செய்யும் வைத்துள்ளாா். கடந்த 20-ஆம் தேதி இரவு அவா் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். இதன்பிறகு 22-ஆம் தேதி கையைத் திறக்க சென்றாா்.
அப்போது கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கடையில் இருந்த கைப்பேசிகள் 31 திருட்டு போயிருந்தது. இது குறித்து சண்முக பிரியன் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement