கிருஷ்ணகிரி

இளநிலை வரைதொழில் அலுவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஒத்திவைப்பு

கிருஷ்ணகிரியில் இளநிலை வரைதொழில் அலுவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இளநிலை வரைதொழில் அலுவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப்பாா்வையாளா் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலா், 33 காலிப் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு டிச. 23 முதல் நிகழாண்டு ஜன. 21-ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் தகுதியான விண்ணப்பங்களுக்கு பிப். 14-ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரையில் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் எழுத்துத் தோ்வு நடைபெற இருந்தது. இந்த எழுத்துத் தோ்வு நிா்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT