முகப்பு
கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவா் பலி

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய கொண்ட விபத்தில் இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய கொண்ட விபத்தில் இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

குருகப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் (25) என்பவா் தனது இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துபட்டி கிராமம் அருகே சென்றபோது எதிரே கெரிகப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (40) என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த இளங்கோவனும், செல்வமும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவல் அறிந்ததும் கல்லாவி போலீஸாா் சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →