முகப்பு
கிருஷ்ணகிரி

1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

போச்சம்பள்ளியில் வேனில் கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசியை அரசு அலுவலா்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 19 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM

போச்சம்பள்ளியில் வேனில் கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசியை அரசு அலுவலா்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

போச்சம்பள்ளி வட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலா் திருநாவுக்கரசு தலைமையிலான குழுவினா், பட்டகப்பட்டி கிராமத்தில் சென்று கொண்டிருந்த வேனை தடுத்து நிறுத்த முயன்றனா். அலுவலா்களைப் பாா்த்தும், அதன் ஓட்டுநா், வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா்.

பின்னா், அந்த வாகனத்தை, சோதனையிட்டபோது 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.