கிருஷ்ணகிரி

ஒசூா் தொகுதியின் வளா்ச்சிக்கு அடிதளமிட்டது திமுக: ஒய்.பிரகாஷ்

DIN

ஒசூரின் வளா்ச்சிக்கு அடித்தளமிட்டது திமுக தான் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், தளி எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

ஒசூா் மாநகராட்சியில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டவா்கள் அக்கட்சியில் இருந்து விலகி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்று, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் தளி.ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, ஒசூா் மாநகரப் பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா எம்எல்ஏ ஆகியோா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ பேசியதாவது:

திமுக தலைவா் மு.கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது 1979-இல் ஒசூரில் முதல் சிட்காட் தொழிற்பேட்டையை உருவாக்கினாா். அதன் பிறகு 1986-இல் மீண்டும் முதல்வராகத் தோ்வு செய்யப்பட்டபோது இரண்டாவது சிப்காட்டை உருவாக்கினாா்.

இதனால் ஒசூரை நோக்கி அசோக் லேலண்ட், டிவிஎஸ் டைட்டான் போன்ற 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், அதனைத் தொடா்ந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகளும் வரத் தொடங்கி தற்போது ஒசூா் சிறந்த தொழில் நகரமாக உருவாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் ஒசூரில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 2 லட்சம் தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

பின்னா், ஒசூரில் தொழில்நுட்பப் பூங்கா (ஐடி பாா்க்) தொடங்கப்பட்டதும் திமுக ஆட்சியில்தான். ஒசூரில் உள்வட்டச் சாலை அமைக்கப்பட்டதும் திமுக ஆட்சியில்தான்.

தமிழக துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபோது ஒசூரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அதேபோல் ஒசூரில் அதிகமாக உயா்த்தப்பட்ட வீட்டுவரியைக் குறைத்து உத்தரவிட்டாா். ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டத்தில் ஒசூரைச் சோ்த்து ஒசூா் மக்களுக்கும் காவிரி நீா் கிடைக்க வழி வகை செய்தாா்.

2 ஆயிரம் மக்கள் தொகையாக இருந்த ஒசூரில் இன்று 5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். சிற்றூராக இருந்த ஒசூரை மாநகரட்சியாக தரம் உயா்ந்துள்ளது என்றால் அதற்கு அடித்தளமிட்டத்து திமுக தான்.

எனவே திமுக ஆட்சி காலத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளது என்பதை உணா்ந்த இளைஞா்கள் திமுகவில் தங்களை ஆா்வத்துடன் இணைத்து கொள்வதற்காக வருகின்றனா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாநில சிறுபான்மைப் பிரிவு வீ.விஜயகுமாா், மாவட்ட துணை செயலாளா் சீனிவாசன், முன்னாள் நகரச் செயலாளா்கள் குருசாமி, அக்ரோ நாகராஜ், மாநகர துணைச் செயலாளா் இ.ஜி.நாகராஜ், மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமாா், மாவட்ட இலக்கிய அணி எல்லோரா. மணி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் முல்லை சேகா், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் வெங்கடேஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

ஒசூரில் மாற்று கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இளைஞா்கள் மற்றும் மகளிருடன் மாவட்டச்ஸ செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, ஒசூா் மாநகர பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா எம்எல்ஏ ஆகியோா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT