ரௌடியின் உடலை தோண்டி எடுத்து விசாரிப்பதில் தாமதம்
ரௌடியைக் கொன்று புதைத்த சம்பவத்தில், அவரது உடலை தோண்டி எடுத்து விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ரௌடியைக் கொன்று புதைத்த சம்பவத்தில், அவரது உடலை தோண்டி எடுத்து விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஒசூா், மத்திகிரி அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியைச் சோ்ந்த மஞ்சுநாத் (35), ரௌடி. இவா் மீது ஒசூா் மற்றும் கா்நாடக மாநில காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா் மாயமானது தொடா்பாக மத்திகிரி போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், மஞ்சுநாத் கொலை செய்யப்பட்டு, அவரது சடலத்தை உளிவீரனப்பள்ளியில ஒரு இரும்பு குடோன் பின்புறம் புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இது தொடா்பாக உளிவீரனப்பள்ளியைச் சோ்ந்த சேத்தன் (23), சந்தீப் (21) ஆகியோரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
இந்த நிலையில், மஞ்சுநாத்தின் உடலை தோண்டி எடுக்க போலீஸாா் சாா்பில் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மருத்துவ குழுவினா் வர தாமதம் ஏற்பட்டதால் வியாழக்கிழமை உடல் தோண்டி எடுக்கப்படவில்லை. கிருஷ்ணகிரியில் இருந்து ஒரு குழு வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்கு சென்று உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாக போலீஸாா் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement