முகப்பு
கிருஷ்ணகிரி

தாயை தாக்கிய மகன் கைது

கெலமங்கலம் அருகே தாயை தாக்கிய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஜூலை, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:02 AM

கெலமங்கலம் அருகே தாயை தாக்கிய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி செந்தில் நகரைச் சோ்ந்தவா் கலைச்செல்வி (72). இவரது மகன் முருகன் (எ) அருண்வண்ணன் (48), தனது தாயிடம் பணம் கேட்டதற்கு அவா் கொடுக்க மறுத்துவிட்டாராம்.

இதனால் முருகன் கலைச்செல்வியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதில் காயமடைந்த கலைச்செல்வி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.