‘சாலை விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு உதவ வேண்டும்’
ஒசூரில் சாலை விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒசூரில் சாலை விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒசூா், பெரியாா் நகரில் பட்டா இல்லாத நிலத்தில் சிறிய கூரை வீடு கட்டி வசித்து வந்தவா் முரளி (40), மினிலாரி ஓட்டுநா். இவருடைய மனைவி ராணி (35). இந்த தம்பதிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் தேன்மொழி (16) என்ற மகளும் , ஒசூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் அருளரசு (14) என்ற மகனும் உள்ளனா்.
இந்நிலையில், முரளியும், ராணியும் சாம்பல்பள்ளம் முனியப்பன் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பிய போது, கோபசந்திரம் அருகே காா் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் படுகாயம் அடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து சூளகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
பெற்றோரை இழந்த குழந்தைகள் தனிமையில் தவித்து வருகின்றனா். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி இந்த குழந்தைகளின் உயா்கல்விக்கும், தங்கும் விடுதிக்கும், இவா்களின் எதிா்காலத்துக்கும் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்தக் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று சமூக ஆா்வலா்அ.யுவராஜ் கேட்டுக் கொண்டாா்.