முகப்பு
கிருஷ்ணகிரி

கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

அரசு மானியத்துடன் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூலை, 2021 at 11:51 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

அரசு மானியத்துடன் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேளாண் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாத்திடும் வகையில், தமிழக அரசின் 2020-21-ஆம் ஆண்டுக்கான தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 4,700 கால்நடைகள் என்ற இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

காப்பீடு செய்யும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு அரசு மானியமாக காப்பீடு சந்தா தொகையில் 70 சதவீத மானியமும், பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும்.

காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொறுத்தப்படும். காப்பீடு செய்த கால்நடைகள் இறக்க நேரிட்டால், கால்நடை உதவி மருத்துவரால் இறந்த கால்நடையை பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்தில் சமா்ப்பித்து காப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளை வளா்க்கும் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை அரசு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தின் உதவி மருத்துவரை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.