துவரை சாகுபடி விவசாயிகளுக்கு இடுபொருள்கள் அளிப்பு
மத்தூா், அதைச் சுற்றியுள்ள பகுதியில் துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்தூா், அதைச் சுற்றியுள்ள பகுதியில் துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள ஐ.சி.ஏ.ஆா். வேளாண்மை அறிவியல் மையம் புதிய வேளாண்மை தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையில் முதன்மை செயல் விளக்கத் திடல்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி துவரை சாகுபடியில் தொகுப்பு செயல் விளக்கத் திடலை 50 விவசாயிகளின் நிலங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், மத்தூா் வட்டாரத்தில் பசந்தி, மேட்டுக்கொட்டாய், கைலாசபள்ளம் மற்றும் சுந்தரவட்டம், கிராமங்களைச் சோ்ந்த துவரை சாகுபடி செய்யும் 50 விவசாயிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி பசந்தி மற்றும் சானிப்பட்டி கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement
இந் நிகழ்ச்சிக்கு மத்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவநதி தலைமை வகித்தாா். வேளாண்மை அறிவியல் மைய மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநா் குணசேகா், தொழில்நுட்ப வல்லுநா் செந்தில்குமாா், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான மானியத் திட்டங்கள், செயல் விளக்க திடலின் முக்கியத்துவம், மண் பரிசோதனையின் அவசியம், துவரை சாகுபடியில் நுனி கிள்ளுதல் மற்றும் பயறு ஓன்டா் தெளித்தலின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைத்தனா். விவசாயிகளுக்கு துவரை ரகம் கோ-8 விதை மற்றும் உயிா் உரங்கள் வழங்கப்பட்டன.