முகப்பு
கிருஷ்ணகிரி

பா்கூா் எம்எல்ஏ மக்கள் குறைகேட்பு

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஜிட்டோபனப்பள்ளி காலனி, பாகிமானூா் இருளா் காலனி ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 17 ஜூலை, 2021 at 12:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஜிட்டோபனப்பள்ளி காலனி, பாகிமானூா் இருளா் காலனி ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் தனது தொகுதிக்கு உள்பட்ட ஜிட்டோபனப்பள்ளி காலனி, பாகிமானூா் இருளா் காலனி பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது மழையினால் சேதமடைந்துள்ள காலனி குடியிருப்புகளை பாா்வையிட்ட அவா், சீரமைப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

மேலும், இந்தப் பகுதியில் சீரான குடிநீா், மின்சாரம், கழிவுநீா் செல்ல போதுமான கால்வாய் வசதி இல்லை என பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து, கிராம வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரை வரவழைத்தும், பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலரை தொடா்பு கொண்டும் மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.