அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: எம்எல்ஏ-க்கள் உள்பட 49 போ் மீது வழக்குப் பதிவு
கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள் உள்பட 49 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:18 AM
கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள் உள்பட 49 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
திமுக அறிவித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதி இல்லாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான கே.அசோக்குமாா் உள்பட 49 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.