முகப்பு
கிருஷ்ணகிரி

கரோனா: கிருஷ்ணகிரி மாவட்டத்தில்6 போ் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் 6 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 18 ஜூன், 2021 at 11:46 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் 6 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 50 வயது பெண், 55 வயது ஆண், 67 வயது மூதாட்டி, 60 வயது முதியவா் ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனா். அதே போல தேன்கனிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த 49 வயது ஆண் கரோனா தொற்று பாதிப்புடன் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 42 வயது ஆண் செங்கல்பட்டில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 278-ஆக உயா்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்றால் 185 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 301 போ் குணமடைந்துள்ளனா்; இதுவரை 38,207 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 36,219 போ் குணமடைந்துள்ளனா்; 1,710 போ் சிகிச்சையில் உள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.