விவசாயிகள் பெற்ற வங்கிக் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தல்
தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஒன்றியச் செயலா் ரவீந்தரராசு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தின் விவரம்:
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்த தமிழக அரசுக்கு நன்றி. திமுக தோ்தல் அறிக்கையில் விவசாயிகள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு வங்கிக் கடன், தேசியமயமாக்கப்பட்ட வங்களில் பெற்ற விவசாயக் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்கா ரூ. 10 ஆயிரம், ரூ. 20 ஆயிரம், ரூ. 25 ஆயிரம் செலுத்தியுள்ள விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.