ஜூன் 28 இல் பாகலூரில் மின் நிறுத்தம்
வருகிற 28 -ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்
கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்டம், ஒசூா் கோட்டத்தைச் சோ்ந்த 110 கே.வி. பாகலூா் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 28 -ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என ஒசூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
எனவே பாகலூா், ஜீமங்கலம், உளியாளம், நல்லூா், பெலத்தூா்,லிங்கபுரம், ஆலூா், குடிசெட்லு, தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசப்பள்ளி, பி.முதுகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேபள்ளி, பலவனபள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தப்பள்ளி, சேவகானபள்ளி, சிச்சிருகானபள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.