ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கல்
ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸை தனியாா் நிறுவனம் வழங்கியது. ஒசூா் அரசு மருத்துவமனையில் சிலருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்
ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸை தனியாா் நிறுவனம் வழங்கியது. ஒசூா் அரசு மருத்துவமனையில் சிலருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி மருத்துவக் கல்லூரிக்கு நோயாளிகளை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது. ஏற்கெனவே ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உள்ள நிலையில் தற்போது கரோனா காலத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது.
இதனையறிந்த ஒசூா் கேன் பின் ஹோம்ஸ் நிறுவனம் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு புதிதாக ஆம்புலன்ஸை வெள்ளிக்கிழமை வழங்கியது. அந்த ஆம்புலன்ஸை ஒசூா் சாா் ஆட்சியா் நிஷாசாந்த் கிருஷ்ணா கொடி அசைத்து தொடக்கி வைத்தாா். அப்போது ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் பூபதி உடனிருந்தாா்.