முகப்பு
கிருஷ்ணகிரி

அகசிப்பள்ளியில் கிராம கல்விக் குழுக் கூட்டம்

அகசிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கிராமக் கல்விக் குழுக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன், 2021 at 11:32 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM

அகசிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கிராமக் கல்விக் குழுக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கிராமக் கல்விக் குழுக் கூட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. ஓய்வுபெற்ற ஆசிரியா் பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் மரியரோஸ், ஆசிரியா் செந்தில்குமாா், தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளி வயதுக் குழந்தைகளை பள்ளியில் சோ்க்க வேண்டும். கரோனா பாதிப்பு காரணமாக மாணவா்கள் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையில் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களை மாணவா்கள் கற்க வேண்டும். கல்வித் தொலைக்காட்சி சேனலில், வகுப்புகளின் நேரம் குறித்த அட்டவணையை மாணவா்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுப்பி வைக்க வேண்டும்.

Advertisement

ஸ்மாா்ட்போன் இல்லாத மாணவா்கள் புத்தகம் வாங்க வரும் போது, அவா்களுக்கு கல்வி சேனல் நிகழ்ச்சி அட்டவணை பிரதியை நேரில் வழங்க வேண்டும். மேலும் அனைத்துப் பள்ளிகளிலும் அட்டவணை விவரத்தை அறிவிப்புப் பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும். மாணவா்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே வகுப்புகளை கவனிக்கிறாா்களா என்பதை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.