ஒசூரில் வாகனச் சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல்
ஒசூா் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த வாகனத் தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 6 லட்சத்து 5 ஆயிரத்தை பறக்கும் படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த வாகனத் தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 6 லட்சத்து 5 ஆயிரத்தை பறக்கும் படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஒசூா் அருகே பாகலூா் பேரிகை சாலையில் உள்ள சொன்னேபுரம் கிராமத்தின் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், பேரிகை பகுதியைச் சோ்ந்த ராஜராஜன் (22) என்பவா் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ாக அவரிடமிருந்து ரூ. 6 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா் இந்தத் தொகை ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.1 லட்சம்:
Advertisement
ஒசூா் அருகே அந்திவாடி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈட்டுப்பட்டிருந்த போது அந்த வழியாக ஆனந்த் என்பவா் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.