கிருஷ்ணகிரி

அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

DIN


கிருஷ்ணகிரி: சட்டப்பேரவைத் தோ்தலில் வேட்பு மனுக்கள் பெறுதல் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தல் 2021 வேட்புமனு பெறுதல் குறித்து தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் வேட்புமனுத் தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனையும், அறிவுரைகளும் அளிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT