பர்கூரில் மதியழகன் (திமுக) வேட்பு மனு
பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மதியழகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மதியழகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தே. மதியழகன் போட்டியிடுகிறார். இவர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் து.பாக்கியலட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது முன்னாள் எம்பி இ. ஜி. சுகவனம், திமுக மாவட்ட துணைச் செயலாளர் டி.ஏ. நாகராஜ், ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேட்புமனுத்தாக்கல் பணி தொடங்கியதையொட்டி பர்கூர் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் பலத்த போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர்.