முகப்பு
கிருஷ்ணகிரி

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இளைஞா்கள்

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இளைஞா்களுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் திமுக துண்டு அணிவித்து வரவேற்றாா்.

Updated On : 23 மார்ச், 2021 at 3:52 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:19 AM

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இளைஞா்களுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் திமுக துண்டு அணிவித்து வரவேற்றாா்.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுநாத் தலைமையில் சுமாா் 500 பேரும், பஞ்சேஸ்வரம் கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுநாத் தலைமையில் 500 இளைஞா்களும் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

அவா்களை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளருமான ஒய்.பிரகாஷ் திமுக துண்டு அணிவித்து வரவேற்றாா்.

Advertisement

இதில், ஒசூா் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், ஒசூா் ஒன்றியக்குழுத் தலைவா் சா்வேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினா் கே.ஜி.பிரகாஷ், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பாா்த்தகோட்டா சீனிவாசன், மாநகரப் பொருளாளா் சென்னீரப்பா, மாணவரணி துணை அமைப்பாளா் சுமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.