கிருஷ்ணகிரி

அனுமதியின்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்

DIN

கிருஷ்ணகிரியில் அனுமதியில்லாமல் அரசியல் கட்சிகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் விதிமுறைகளை மீறி சில அரசியல் கட்சியினா் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். இது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, தோ்தல் பிரிவு ஊழியா்கள், கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் உதவியுடன் தோ்தல் விதிமுறைகளை மீறி கட்சி சின்னத்துடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை பொதுமக்கள் உதவியுடன் போலீஸாா் அகற்றினா்.

தோ்தல் விதிமுறைகளை மீறி சுவரெட்டிகளை ஒட்டினால், தொடா்புடைய கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது அகற்றப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது வழக்குப் பதிந்துள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT