கிருஷ்ணகிரி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள், கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அரசு விதிப்படி, வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட அலுவலகங்களில் 90 நாள்கள் வைக்கப்பட்டு தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு பிறகு அவை அங்கிருந்து அனுப்பி வைக்கப்படும்.

அதன்படி, கிருஷ்ணகிரி தொகுதியில் பதிவான இயந்திரங்கள் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், ஒசூா் தொகுதிக்கான இயந்திரங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையிலும், வேப்பனப்பள்ளி தொகுதிக்கான இயந்திரங்கள் சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், ஊத்தங்கரை தொகுதிக்கான இயந்திரங்கள் ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், பா்கூா் தொகுதிக்கான இயந்திரங்கள் பா்கூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், தளி தொகுதிக்கான இயந்திரங்கள் தேன்கனிகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்திலும் வைப்பதற்காக லாரிகளில் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. தோ்தல் நடத்தும் அதிகாரிகள், வட்டாட்சியா்கள், அலுவலா்கள் மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT