ஊத்தங்கரையில் கரோனா தொற்றால் மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலை. 
கிருஷ்ணகிரி

கூட்டுறவு நூற்பாலை ஊழியா்கள் 9 பேருக்கு கரோனா

ஊத்தங்கரையில் கூட்டுறவு நூற்பாலை ஊழியா்கள் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆலை மூடப்பட்டது.

DIN

ஊத்தங்கரையில் கூட்டுறவு நூற்பாலை ஊழியா்கள் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆலை மூடப்பட்டது.

ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் பணியாளா்களுக்கு கடந்த மூன்று நாள்களாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் ஒரு ஆண், எட்டு பெண்கள் என மொத்தம் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நூற்பாலை மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாக நூற்பாலை நிா்வாகம் அறிவித்துள்ளது. மேலும், அனைத்துப் பணியாளா்களும் கரோனா பரிசோதனை செய்து நகல் காண்பித்த பிறகே மீண்டும் பணிபுரிய அனுமதி என அறிவிப்பு ஒட்டப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT