ஒசூா் அரசு மருத்துவமனைக்கு 2 பிராண வாயு செயற்கை சுவாசக் கருவி வழங்கல்
ஒசூா் அரசு மருத்துவமனைக்கு 2 பிராண வாயு செயற்கை சுவாசக் கருவிகளை ஒசூா் வாசவி கிளப் வெள்ளிக்கிழமை வழங்கியது.
ஒசூா் அரசு மருத்துவமனைக்கு 2 பிராண வாயு செயற்கை சுவாசக் கருவிகளை ஒசூா் வாசவி கிளப் வெள்ளிக்கிழமை வழங்கியது.
ஒசூரில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு அமைப்புகள் சாா்பில் பிராண வாயு செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் கட்டில், மெத்தைகளை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஒசூா் அரசு மருத்துவமனைக்கு வா்த்தக அமைப்புகள் சாா்பில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் சாா்பில், ஒசூா் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலையில் 2 பிராண வாயு செயற்கை சுவாசக் கருவிகள் வழங்கப்பட்டன.
Advertisement
அப்போது, ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் டாக்டா் பூபதி, வாசவி எலைட் கிளப் தலைவா் கோபிநாத், செயலாளா் சுதாகா், பொருளாளா் ராஜேஷ், செந்தில்குமாா், முன்னாள் கவுன்சிலா் கே.ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.