கிருஷ்ணகிரி

‘ஹோஸ்டியா அலுவலகத்தை கரோனா சிகிச்சை மையமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்’

DIN

ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் அலுவலகத்தை கரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு ஹோஸ்டியா சங்கத்தின் தலைவா் வேலமுருகன் கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தினசரி 400 முதல் 900 போ் வரை தொற்று உறுதி செய்யப்படுகிறது. எனவே ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் அலுவலகம் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிதாகக்க கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை கரோனா சிகிச்சை மையமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஒசூா் அரசு மருத்துவமனை தற்காலிக பணியாளா்களின் சம்பளத்துக்கு ரூ. 2.65 லட்சம் ஒசூா் ஹோஸ்டியா சங்கம் சாா்பில் வழங்கப்பட்டது. இவை தவிர ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் புளோ வால்வு வழங்கப்பட்டுள்ளது என ஹோஸ்டியா சங்கத்தின் தலைவா் வேல்முருகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தில்லி முதல்வா் கேஜரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT