முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே ஒரே நாளில் 3 பேர் படுகொலை

ஒசூர் அருகே ஒரே நாளில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட லோகேஷ்.
பகிர்:

ஒசூர் அருகே ஒரே நாளில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே பெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் (30). 'இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது வீட்டிற்கு சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை தட்டி உள்ளனர். கதவை திறந்து கொண்டு வெளியே வந்த லோகேஷிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது துப்பாக்கி சத்தம் கேட்கவே அவரது மனைவி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த பொழுது ரத்த வெள்ளத்தில் லோகேஷ் உயிரிழந்து கிடந்தார். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் அவர்கள் வந்த காரில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் நிகழ்வு இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓசூரைச் சேர்ந்த பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒசூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை: ஓசூர் அருகே சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா வயசு(20), ஓசூர் ஐ டி ஐ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஆந்திர மாநிலம், வீ-கோட்டா பகுதியில் அண்மையில் நிகழ்ந்த கொலை வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் கடந்த 20 நாட்களுக்கு முன் ஆந்திரா போலீசார் சோமநாதபுரம் கிராமத்திற்கு வந்து விசாரித்தனர். இந்நிலையில் கடந்தவாரம் சோமநாதபுரம் கிராமத்திற்கு சென்ற சூர்யாவை அந்த கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பா என்பவர் உட்பட சிலர் சேர்ந்து அந்த கிராமத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டதாக கூறி சூர்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா தனது உறவினர்கள் சுதா சுதர்சன் ஆகியோருடன் சேர்ந்து எல்லப்பாவை தாக்க திட்டமிட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு சூர்யா, சுதா சுதர்சன் ஆகியோர் செல்லப்பாவை மது அருந்த அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்தனர். பின்னர் அவரது சடலத்தை ரயில்வே தண்டவாளத்தின் அருகே வீசிவிட்டு சென்றுவிட்டனர். எல்லப்பா வீடு திரும்பாத காரணத்தால் அவரது பெற்றோர்கள் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி சூர்யா, சுதர்சன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ஒசூர் அருகே கெலமங்கலம் செல்லும் சாலையில் உள்ளது நாகதோனை கிராமத்திற்கு அருகில் ரயில்வே ட்ராக் உள்ளது. அங்கு ரயில்வே பணியில் இருந்தவர் சிவப்பா. இவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரது சடலத்தை கைப்பற்றிய கெலமங்கலம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் அருகே ஒரே நாளில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →