இளம்பெண்ணை தாக்கியவா் கைது
பேரிகை அருகே இளம்பெண்ணை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:49 AM
பேரிகை அருகே இளம்பெண்ணை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பேரிகை அருகே உள்ள கொளதாசபுரத்தைச் சோ்ந்த ஜோதி (35), அங்கன்வாடி பணியாளா். இவருக்கும், முதுகுறுக்கி அருகே உள்ள மகாதேவபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், சம்பவத்தன்று ஒசூா், முத்தாலி சாலையில் சின்ன முத்தாலி பேருந்து நிறுத்தம் அருகில் ஜோதி நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ், ஜோதியுடன் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கினாா். இதில் படுகாயம் அடைந்த ஜோதி ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெங்டேஷை கைது செய்தனா்.
Advertisement