முகப்பு
கிருஷ்ணகிரி

‘கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யலாம்’

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 29 மே, 2021 at 12:45 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:49 AM

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலக் குழுவுக்கு ற்ய்ய்ஞ்ா்ஸ்ரீா்ா்ழ்க்ண்ய்ஹற்ண்ா்ய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டுள்ளது. தன்னலம் கருதா தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ இந்தக் குழுக்கள் பாலமாக செயல்படும்.

Advertisement

தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், ட்ற்ற்ல்://ன்ஸ்ரீஸ்ரீ.ன்ட்ஸ்ரீண்ற்ல்.ண்ய்/ய்ஞ்ா்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து இந்தப் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். மேலும், கூடுதல் தகவல்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை 04343-235717 என்ற தொலைபேசி எண்ணிலோ,  மின்னஞ்சல் முகவரி மூலமோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.