கிருஷ்ணகிரி

வாகனங்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை:பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவார காலத்துக்கு தளா்வில்லாத பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. இதனால், பொதுமக்களுக்குத் தேவையானஅத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், பழ வகைகள், மளிகைப் பொருள்கள் அவரவா் இல்லங்களுக்குச் சென்று வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் 58 வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. ஒசூா் மாநகராட்சி சாா்பில் 119 வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 பேரூராட்சிகளில் 79 மினி வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வசதியை, பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும், தேவையின்றி வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT