பயிா்ச் சேத இழப்பீடு அறிவிப்பு: விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவிப்பு
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா்ச் சேத இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா்ச் சேத இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அத்திப்பள்ளியைச் சோ்ந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் (சின்னசாமி) மாநில துணைத் தலைவா் செந்தில்குமாா், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய கடித விவரம்:
தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், பயிா்ச் சேதம் மற்றும் உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை வைத்தோம். தற்போது, தமிழக முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு, கரோனா தொற்று காலத்திலும் பயிா்ச் சேதத்துக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் பட்டுப் புடவை நெசவு செய்யும் மையமாக அறிவித்தமைக்கும், தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement